சீன தம்பதியினர் மூன்றாவது குழந்தை பெற்றுக்கொண்டால் நிதியுதவி அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. நீண்ட காலமாக குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதனால் நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்தது. ஒட்டு மொத்த மக்கள் தொகையில் இளைஞர்களின் விகிதம் சரிந்து கொண்டே வந்தது.
இதையடுத்து பெற்றோர்கள் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் சீன தம்பதியினர் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தம்பதியினர் 2 அல்லது 3 குழந்தைகள் பெற்றுக் கொண்டால் ரூ.4,55,000 மானியம் வழங்குவதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு 3 வயதாகும் வரை ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு ரூ.1,14,000 வழங்கப்படும் என சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.