மத்திய பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 7 வருடங்களில் மட்டும் 3 கோடி ஏழை மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலான வீடுகள் பெண்களின் பெயர்களில் உள்ளது. இதன் மூலம் பெண்கள் எஜமானிக்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காக ஏராளமானோர் ஏழைகளை பயன்படுத்துகிறார்கள். ஒரு ஏழைக்கு சொந்தமான வீடு இருக்கும் போது அவருக்கு தைரியமும் பிறக்கும்.
ஏழைகளின் வாழ்க்கையை ஜன்தன் கணக்கு மாற்றும் போது அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு வீடு என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும் என்பதை அனைவராலும் கருத்தில் கொள்ள முடியும். எனவே அரசு கட்டி தரும் வீடுகள் ஒருவகையில் ஏழைகளை லட்சாதிபதிகளாக மாற்றியுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.