Categories
தேசிய செய்திகள்

3 கோடி பயணிகளின் தகவல் விற்பனைக்கு… வெளியான தகவல்… ரயில்வே அமைச்சகம் விளக்கம்…!!!!!

இந்திய பயணிகள் 3 கோடி பேரின் தகவல்கள் விற்பனைக்கு இருப்பதாக ஹாக்கர்கள் விளம்பரம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்திய ரயில்வே அப்படி பயணிகளின் தகவல்கள் திருடப்படவே இல்லை என இந்த செய்தியை மறுத்துள்ளது. ஹேக்கர்களுக்கான இருண்ட இணையதள பக்கங்களில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பு மற்றும் சர்வர்களிலும் அப்படி ஒரு ஊடுருவல் நடைபெறவில்லை என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி தனது வணிக கூட்டாளிகள் அனைவரையும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை பரிசோதிக்கவும் அதனுடைய பாதுகாப்பை உறுதி செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்திய ரயில்வே கூறியதாவது, ஹாக்கர்களிடமிருந்து கிடைத்திருக்கும் சில தகவல்களை பரிசோதனை செய்தபோது அதன் பேட்டர்ன் ஐ.ஆர்.சி.டி.சி தகவல் பதிவு அமைப்பின் பேட்டர்னுடன் ஒத்துப் போகவில்லை. அதனால் விற்பனைக்கு வந்திருக்கும் தகவல்கள் இந்திய ரயில் பயணிகளுடையது அல்ல. மேலும் ஐ.ஆர்.சி.டி.சி சர்வர்களிலும் எந்த ஊடுருவலும்  நடைபெறவில்லை என ரயில்வே அமைச்சக பேச்சாளரால்  விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |