Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

” 3 கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தங்கள்” 4 பேரை கைது செய்த வனத்துறையினர்….!!!

யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த 4 பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் பகுதியில் சட்ட விரோதமாக சிலர் யானை தந்தங்களை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் அப்பகுதியில் இருக்கும் கண்மாயில் சோதனை நடத்தினர். அப்போது மறைத்து வைத்திருந்த 2 யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 3 கோடி ரூபாய்.

இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், திருப்பூரை சேர்ந்த ஜெயக்குமார், விருதுநகரை சேர்ந்த பாண்டியன், சங்கர் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் பெங்களூருவில் இருந்து யானை தந்தங்களை கடத்தி வந்து மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இவர்கள் நான்கு பேரையும் வனத்துறையினர் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |