கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டம்பாக்கம் பகுதியில் மாரியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் மற்றும் ஒரு அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த மூன்று கோவில்களிலும் மாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த 3 கோவில்களின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் விழுப்புரம் தாலுகா காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.