Categories
மாநில செய்திகள்

3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்… எங்கெல்லாம் தெரியுமா…? தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்…!!!!!

திருவண்ணாமலை, மதுரை, ராமேஸ்வரம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் -அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை -அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், மதுரை -அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் போன்ற கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

2023 -ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின் போது நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து கோவில்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது இந்த திட்டத்தை விரிவுபடுத்தி  ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை ஆகிய திருக்கோவில்களில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக ஒரு நாளைக்கு சுமார் 8000 பக்தர்கள் அன்னதானம் பெற்று பயனடைகின்றனர்.

இதில் தலைமைச் செயலகத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர் பாபு, தலைமை செயலாளர் முனைவர் வே.இறையன்பு, இ.ஆ.ப சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |