திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள அங்காளம்மன் பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உட்பட 5 பேர் சம்பவத்தன்று அங்கு உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது குளத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கியவரை காப்பாற்ற முயன்ற போது ஒன்றன்பின் ஒன்றாக நீரில் மூழ்கியுள்ளனர். இதில் அதிதா(14), ஜீவிதா(14), ஜோதி(10), சுமதி(38), சுகந்தி ஆகிய 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories