Categories
தேசிய செய்திகள்

3 தசாப்தங்களுக்குப் பிறகு….. காஷ்மீரில் முதல் மல்டிபிளக்ஸ் தியேட்டர்…. இன்று திறப்பு….!!!!

ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, எல்லையின் மறுபுறத்தில் இருந்து நீண்ட காலமாக பயங்கரவாதத்தைக் கண்ட காஷ்மீரில் மல்டிபிளக்ஸ் திரையரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 1990ல் பயங்கரவாதம் அதிகரித்ததால் அங்கு திரையரங்குகள் மூடப்பட்டது. மல்டிபிளக்ஸ் திரையரங்கு வரும் செப்டம்பரில் இருந்து திறந்து செயல்படவுள்ளது. INOX ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, மூன்று ஆடிட்டோரியங்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொன்றும் அதிநவீன ஒலி அமைப்புகள் மற்றும் வசதியான இருக்கை வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மல்டிப்ளெக்ஸில் சுமார் 520 பேர் அமர்ந்து சினிமா பார்க்கலாம். இங்கு உணவு விடுதிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன என்றும், அவை குழந்தைகளை ஈர்க்கும் இடமாக இருக்கும் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் 32 ஆண்டுகள் கழித்து திரையரங்க மல்டிபிளக்ஸ் திறக்கப்பட்டுள்ளது. ஐநாக்ஸ் திறந்துள்ள இந்த மல்டிபிளக்ஸ் திரையரங்கில் இன்று முதல் விக்ரம் வேதா (இந்தி) வெளியிடப்படுகிறது. கூடுதலாக பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களும் திரையிடப்பட இருக்கின்றன. பல்வேறு சர்ச்சைகளாலும் தீவிரவாத தாக்குதல்களாலும் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் பலகட்ட முயற்சிகளுக்கு பின் இப்போது திறக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |