Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

3 திருமணம்… மீண்டும் ஒரு காதல்…. 4வது திருமணத்தில் சிக்கிய நபர்…!!

மூன்று திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கும் நிலையில் நான்காவதாக காதல் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஜெயில் கார்னரில் அமைந்துள்ள புதிய காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் கார்த்திக் தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணை காதலித்து கடந்த வருடம் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவர் மீது சுமதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரது தொலைபேசியை எடுத்து சோதித்தபோது கார்த்திக் ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்ததும் அவர்களுக்கு குழந்தை இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து சுமதி கார்த்திக்கிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுமதி புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |