சீனா நேற்று சிச்சுவான் மாகாணத்தில் ஜிசாங்க் செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து மார்ச்-2டி ராக்கெட் மூலம் மூன்று தொலையுணர்வு செயற்கைக்கோள்களை அதிரடியாக விண்ணில் செலுத்தியது. இந்த 3 செயற்கைக்கோள்களும் அவற்றுக்கான சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இந்த செயற்கைகோள்கள் அறிவியல் சோதனைகள், நிலவள ஆய்வுகள், விவசாய உற்பத்திப் பொருட்களின் விளைச்சல் மதிப்பீடு, பேரிடர் தடுப்பு மற்றும் குறைப்புக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் சீனாவில் மாற்று வரிசை ராக்கெட்டின் 424 வது விண்வெளி திட்டம் இதுவாகும். சீனா கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி மூன்று யாகான்-35 செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது.