மூன்று நகரங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்துள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கொல்கத்தா, மும்பை, நொய்டா போன்ற பல்வேறு நகரங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்கள் அமைந்திருக்கின்றன. இந்த மையங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார். இதுபற்றி பிரதமர் பேசிய போது, “இந்தியா மற்ற நாடுகளை விட மிகச் சிறப்பான நிலையில் கொரோனா நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து தான் இத்தகைய அதிவிரைவில் கொரோனா பரிசோதனை மையங்கள் 3 நகரங்களிலும் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. அதன் மூலமாக ஒரே நாளில் அதிகபட்சமாக 10 ஆயிரத்திற்கும் மேலான நபர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ள முடியும்” என்று கூறினார். மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது 14 லட்சத்து 35 ஆயிரத்து 453 ஆக உயர்ந்துள்ளது. அதுபோலவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை யும் 32 ஆயிரத்து 771 ஆக அதிகரித்திருக்கிறது.