Categories
தேனி மாவட்ட செய்திகள்

3 நாட்களாகவே சிக்கல்தான்…. ரொம்ப தட்டுப்பாடா இருக்கு…. கட்சி செயலாளரின் கோரிக்கை….!!

தேனியிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசியின் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனா மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்தவகையில் தேனி மாவட்டத்திலும் கொரோனா தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாகவே கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் தனியார் மருத்துவமனைக்கு தடுப்பூசிகளை வினியோகம் செய்வதும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே தேனி மாவட்டம் கேரளாவின் எல்லைப்பகுதியில் உள்ளதாலும், வெளி மாவட்டத்தின் தொடர்புகள் அதிகளவில் இருப்பதாலும் தொற்றின் பரவல் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. இதனால் தேனி மாவட்டத்திற்கு அதிகமாக தடுப்பூசியை வரவழைத்து அதன் தட்டுப்பாட்டை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளரான வெங்கடேசன் மின்னஞ்சல் மூலமாக தேனியிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

Categories

Tech |