3 நாட்களாக மரத்தை தவித்த பூனையை தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன் புதூர் நியூ தில்லை நகர் 10-வது வீதியில் ஏராளமான வீடுகள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் மரத்தின் உச்சியில் ஏறிய பூனை கீழே இறங்க முடியாமல் தவித்தது. கடந்த 3 நாட்களாக உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மரத்திலேயே பூனை கத்திய படி இருந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பூனையை மீட்க முயற்சி செய்தனர். அப்போது அச்சத்தில் பூனை மரத்தின் மேல் அங்குமிங்கும் ஓடியதால் அதனை மீட்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பூனையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.