பிரிட்டனில் காவல்துறையினருக்கு எதிரான போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பிரதமர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிரிஸ்டலில் புதிதாக கொண்டுவரப்போகும் காவல் சட்டத்தினை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் “Kill The Bill” என்ற போராட்டத்தை கடந்த 3 தினங்களாக நடத்தி வருகின்றனர். இதில் சுமார் 30க்கும் அதிகமான மக்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவில் போராட்டம் நடந்த போது திடீரென்று மக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் அதிகாரிகளை பலமாக தாக்கியுள்ளனர்.
அந்த சமயத்தில் கலவரத்தில் ஈடுபட்ட சுமார் பத்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மக்கள் காவல் அதிகாரிகள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, பிரிஸ்டலில் காவல் துறையினரை எதிர்த்து கடும் தாக்குதல்கள் நடந்துள்ளது.
பொது உடமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கலவரத்தை கையாளும் ஒரு சிலர் கற்கள் போன்ற ஆயுதங்கள் கொண்டு தாக்குவதை அதிகாரிகள் பொறுத்துக்கொள்ள வேண்டிய தேவையில்லை. மேலும் நகரம் மற்றும் காவல்துறையினருக்கு என் ஒட்டுமொத்த ஆதரவையும் அளிக்கிறேன் என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.