காவலன் செயலியை 3 நாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்திருப்பதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விசுவநாதன் தெரிவித்திருக்கிறார் .
பெண்கள் வெளியில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு பிரச்சனை நிலவி வருகிறது .இதில் பெரும் பங்கை வகிப்பது பாலியல் குற்றங்கள் .இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பைக் கருதி ,காவலன் என்ற செயலியை சில நாட்களுக்கு முன் வெளியிட்டனர். சென்னை காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை ஆணையர் விசுவநாதன், காவலன் செயலி மூலம் உதவி கோரினால் காவல் துறையினர் விரைந்து வந்து உதவி செய்வார்கள் என்றார். நாட்டிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னைமற்றும் கோவை நகரங்கள் திகழ்வதாக கூறி, சமூக ஊடகத்தில் முகம் தெரியாத நபர்களிடம் பழகுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.