Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 நாட்களில் 24 1/2 கிலோ கஞ்சா…. மடக்கி பிடித்த ரெயில்வே போலீசார்…. தொடரும் கஞ்சா வேட்டை…!!

சென்னை சென்ட்ரல் ரயில்  நிலையத்தில் 24 1/2 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை  சென்ட்ரலுக்கு  வருகின்ற எக்ஸ்பிரஸ்  ரயிலில் கஞ்சா  கடத்துவதாக போலீசாருக்கு  தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சசிகலா மற்றும் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது  ஹவுராவிலிருந்து புறப்பட்டு  சென்னைக்கு வந்து  சேர்ந்த எக்ஸ்பிரஸ் ரயிலில்   20 கிலோ கஞ்சா இருப்பது போலீசார் சோதனையில்  கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் விசாகப்பட்டினத்திலிருந்து 12 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அதேபோன்று நேற்று முன்தினம் அதிகாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 9 ஆம் தடத்தில் ஹவுரா ரயில் வந்து நின்றுள்ளது. அந்த எக்ஸ்பிரஸில் ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அங்கு  டி-2 பெட்டியில் இரண்டு பைகள் கிடந்துள்ளது. அதில் சோதனை செய்ததில் 4 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிந்தது  .

இதனையடுத்து பறிமுதல் செய்த கஞ்சாவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்துள்ளனர். கடந்த 3 நாட்களாக ஹவுராவிலிருந்து வந்த  எக்ஸ்பிரஸ் ரயிலில்  24 1/2 கிலோ கஞ்சாவை  ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

 

Categories

Tech |