ரயில் பாதை பணிகள் நடைபெறுவதால் 3 நாட்களுக்கு கன்னியாகுமரியில் இருந்து பூனை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் தற்போது இரட்டை ரயில்வே பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 16382 என்ற வண்டி என் கொண்ட கன்னியாகுமரி-பூனை எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற 6,7,8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இதனையடுத்து மும்பை சி.எஸ்.டி-நாகர்கோவில் சந்திப்பு ரயில் வருகின்ற 9-ஆம் தேதி பூனை சந்திப்பு-வாடி இடையே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படும்.
மேலும் நாகர்கோவில் சந்திப்பு-மும்பை சி. எஸ். டி. எக்ஸ்பிரஸ் ரயில் வருகின்ற 5,8 ஆகிய தேதிகளில் வாடிப்பு சந்திப்பு இடையே மாற்றம் செய்யப்பட்டு மிராஜ் சந்திப்பு வழியாக இயக்கப்படும். அதேபோல் 61352 என்ற வண்டி எண் கொண்ட நாகர்கோவில் சந்திப்பு-சி.எஸ்.டி. ரயில் வாரம் 2 முறை வாடி சந்திப்பு-பூனை சந்திப்பு இடையை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.