தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழ்நாடு, காரைக்கால், புதுவை உள்ளிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இன்று திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய ஒரு சில இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தமட்டில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.