புதுச்சேரியை பொருத்தவரை தற்போது நிவர் புயல் என்பது நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதை அறிவுறுத்தும் விதமாகத்தான் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 7 எச்சரிக்கை கூண்டு ஏற்றிவிட்டால் இந்த பகுதியை புயல் தாக்கும் அல்லது கடக்கும் என்று பொருள்படும். இதனிடையே முன்னேஎச்சரிக்க நடவடிக்கையாக தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு முதல் 26 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.
Categories