Categories
மாநில செய்திகள்

3 நாட்கள் தீபம் ஏற்ற வேண்டும்…. நல்ல நேரம் இது தான்…!!

கார்த்திகை தீப திருவிழாவை அனைவர் வீடுகளிலும் மூன்று நாட்கள் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழாவான திருக்கார்த்திகை அன்று  அனைவரது வீடுகளிலும் விளக்கு ஏற்றி கொண்டாடி வருகிறோம். இந்நிலையில் நாளை திருக்கார்த்திகை விழாவை கொண்டாட இருக்கிறோம். இந்த நாளில் வீடுகளில் விளக்கு ஏற்றுவதால் சுபிட்சம் கிடைக்கும். மேலும் சிலர் கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் சுத்தமாக இருந்து விளக்கேற்றி வருவர். தினமும் இரவில் வீட்டின் வாசலில் விளக்கேற்றி வைத்து வழிபடுவார்கள்.

தீபம் என்பது இறைவன் ஜோதி வடிவானவர் என்பதை உணர்த்துகிறது. திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அனைவர் வீடுகளிலும் கார்த்திகைக்கு முதல் நாள் தீபம் ஏற்ற வேண்டும். இது பரணி தீபம் என்கிறார்கள். பிறகு கார்த்திகை அன்றும் கார்த்திகைக்கு மறுநாளுமாக மூன்று தினங்கள் தொடர்ந்து தீபம் ஏற்றவேண்டும். திருவண்ணாமலையில் மகா தீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்படுவதால் ஏற்றுவதால் அனைவரும் அந்த நேரத்திலேயே தீபம் ஏற்றலாம்.

Categories

Tech |