தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர், 13ல் துவங்கியது. முதல் நாளில் பொது பட்ஜெட்டும், மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அடுத்த மூன்று நாட்கள், சட்டசபை கூட்டத்துக்கு விடுமுறை. அதன்பின், இன்று மீண்டும் சட்டசபை கூட உள்ளது.
முதற்கட்டமாக, நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்க உள்ளது. இன்றைய கூட்டத்தில், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் பங்கேற்க உள்ளனர். மக்கள் பிரச்னைகளை முன் வைத்து, சட்டசபையில் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தர, அ.தி.மு.க., திட்டமிட்டுள்ளது. ஆனாலும், அ.தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி தரும் வகையில், தி.மு.க.,வின் செயல்பாடுகள் இருக்கும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது.