Categories
தேசிய செய்திகள்

3 நாட்கள், 240 கி.மீட்டர் சொகுசு காருக்குள்….. உல்லாச பயணம் போன ராஜ நாகம்…. சுவாரஸ்யம் கலந்த அதிர்ச்சி சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தில் மூன்று நாட்கள் 240 கிலோ மீட்டர் சொகுசு காருக்குள் ராஜநாகம் பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஆர்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவர் வசித்து வருகிறார். இவர் மலப்புரம் சென்றிருந்த வேளையில் அங்குள்ள வழிக்கடவு சோதனை சாவடிக்கு அருகே கார் நிறுத்தப்பட்டிருந்த போது காருக்குள் பாம்பு ஏறியதை பார்த்ததாக கூறியுள்ளார். ஆனால் காருக்குள் எவ்வளவு தேடியும் சுஜித்தால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் பாம்பை வெளியே எடுப்பதற்காக வனத்துறை அதிகாரிகளை அழைத்துள்ளார். அப்போது வனத்துறை அதிகாரிகள் சுஜித் காரை ஸ்டார்ட் செய்ய சொன்னார்கள். என்ஜின் அதிகமாக வெப்பமடைந்தால் பாம்பு தானாக வெளியேறிவிடும் என நினைத்து அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு செய்து காரை ஒரு சர்வீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்று முழுவதுமாக சரிபார்க்க காரை தூக்கி உள்ளார். அப்படியும் பாம்பு தென்படாததால் பாம்பு தானாக வெளியே சென்று இருக்கும் என நம்பியுள்ளார்.

இதனை அடுத்து சுஜித் காரில் வழக்கம்போல் பயணத்தை மேற்கொள்ள தொடங்கியுள்ளார் அதன் பின் மீண்டும் 240 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த ஊருக்கு கிளம்பியுள்ளார். பாம்பு புகுந்த விஷயத்தை அவர் மறந்து இருந்த நேரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது காருக்குள் தொங்கிக் கொண்டிருந்த பாம்பு சட்டையை பார்த்து அவரும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மேற்கொண்ட சோதனையில் அந்த பாம்பு சிக்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை சுஜித் வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள அவரது நண்பர் வீட்டிலிருந்து பத்து அடி நீளம் கொண்ட ராஜ நாகத்தை வனத்துறை அதிகாரிகள் மீட்டெத்டுதிருக்கின்றனர். அப்போது சுஜித்திடம் பாம்பை காட்டி வனத்துறையினர் அவர் காருக்குள் எரிதாக கூறப்பட்ட பாம்பு அதுதான் என்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் பாம்பை பாதுகாப்பான இடத்தில் விடுவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |