தமிழகத்தில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 3 ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 78 ஆயிரத்தை கடந்தது. மேலும் 68 பேர் உயிரிழந்ததால் கொரோனா பலி ஆயிரத்தை கடந்தது.
தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்து 500 கடந்தது. இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 713 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக உயர்ந்தது. இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 1939 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 699 ஆக உயர்ந்தது. இன்று ஒரே நாளில் 68 பேர் கொரோனா தாக்குதலால் பலியானதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்தது.
இன்று மட்டும் 2737 சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதுவரை தமிழகத்தில் 44 ஆயிரத்து 94 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தமிழக சுகாதாரத் துறை அளித்த தகவல்படி இன்று விருதுநகர் தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 248 பேருக்கும், மதுரை மாவட்டத்தில் 218 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 146 பேருக்கும், வேலூர் மாவட்டத்தில் 118 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 98 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 34,805 ( 32,068 பேர் ) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் தமிழகத்தில் மொத்தமாக 10,77,454 ( 10,25,059 பேர் ) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 25ஆம் தேதி 32,543 பரிசோதனை ( 30,307 பேர் ), 26ஆம் தேதி 33,675 ( 32,675 பேர் ) பரிசோதனை என மொத்தமாக 1,01023 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 95,050 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இப்படி அதிகமான பரிசோதனை மேற்கொள்ளவில்லை. இதனால் தமிழக சுகாதாரத்துறையை பலரும் பாராட்டுவதோடு மட்டும் இல்லமால் எப்படி இவ்வளவு ? பரிசோதனை என வியந்து பார்க்கின்றது.