மத்திய மந்திரி எல்.முருகன் நிக்கோபரில் உள்ள ஜங்லிகாட் துறைமுகத்தை பார்வையிட்டுள்ளார். அப்போது ஆழ்கடலில் மீன்கள் அதிகம் கிடைக்கும் இடங்களை கண்டறியும் படகை கொடியை செய்து தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது ஹாவ்லாக் கார் நிக்கோபர் தீவுகளில் 100 வாட் திறன் கொண்ட இரண்டு பண்பலை வானொலி ஒளிபரப்பு நிலையம் தொடங்கப்பட இருப்பதாக கூறியுள்ளார். அதன் பின் போர்ட் பிளேயர் புருஷா பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் உள்ள துப்புரவு பணியாளர்களுடன் மதிய உணவு அருந்தியுள்ளார். மேலும் போர்ட் பிளேயரில் உள்ள வேலூர் சிறைச்சாலையை பார்வையிட்டு இருக்கிறார்.
Categories