அமெரிக்காவை சேர்ந்த பெட்டர் டாட் காம் என்ற பிரபல நிறுவனம் ஒரே நாளில் ஜூம் காலில் 900 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து ஜூம் காலில் ஊழியர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான விஷால் தாங்கள் இந்த ஜூம் காலில் இருந்ததால் அதிர்ஷ்டம் இல்லாதவர் எனவும், தாங்கள் தற்போது இலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.
இந்த அதிர்ச்சி அறிவிப்பை கொடுத்துள்ள அவர் தமது ஊழியர்களை சோம்பேறி மற்றும் பலன் அளிக்காதவர்கள் என சாடியுள்ளார். 3 நிமிடங்கள் மட்டுமே நடத்தப்பட்ட இந்த ஜூம் காலில், 900 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் குறைந்தது 250 பேர் 1 நாளைக்கு சராசரியாக 2 மணிநேரம் மட்டுமே பணியாற்றியதாகவும் பெட்டர் டாட் காம் சிஇஓ விஷால் குறிப்பிட்டுள்ளார்.