Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

3 நிமிடம் தடைப்பட்ட சி.சி.டி.வி கேமராவின் காட்சிகள்…. அரசியல் கட்சியினர்கள் அதிர்ச்சி…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருக்கும் அறையின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சிறிது நிமிடம் தடைபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட எந்திரத்தை வாக்கினை எண்ணும் அறையினுள் வைத்து பூட்டி அந்த அறைக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலிருந்தும் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்களை பொன்னேரி கரையிலிருக்கும் என்ஜினியர் கல்லூரியில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் தற்போது திடீரென்று மழை பொழிந்தது. இதனால் எந்திரம் வைக்கப்பட்டிருக்கும் அறையின் கண்காணிப்பு கேமராவின் காட்சியினை காமிக்கும் அரசியல் பிரதிநிதிகளின் அறையில் 3 நிமிடம் பதிவாவது தடைப்பட்டது. இதனால் அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |