Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 பள்ளி வாகனங்களின் தகுதி சான்றிதழ் ரத்து…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!!

பராமரிப்பு இல்லாத வாகனங்களில் தகுதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் பள்ளி வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்தில் சிக்கியதால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துமாறு மாவட்ட ஆட்சியர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின் படி தாளவாடி, சத்தியமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட வாகனங்களை கோபிசெட்டிபாளையம் போக்குவரத்து அலுவலர் முனுசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்துள்ளார். அப்போது வாகனங்களில் அவசரகால கதவுகள் சரியாக இயங்குகிறதா? முறையான ஆவணங்கள் இருக்கிறதா? என ஆய்வு செய்துள்ளனர். இதில் முறையாக பராமரிக்கப்படாத 3 வாகனங்களின் தகுதி சான்றிதழை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

Categories

Tech |