தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எருக்கம்பட்டி கிராமத்தில் ராணுவ வீரரான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமுதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமுதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமுதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.