Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

3 பேருக்கு செய்யும் கடமையாக கருதி நடந்ததை கூறினேன் – கமல் ஹாசன்!

3 பேருக்கு செய்யும் கடமையாக கருதி படப்பிடிப்பில் நடந்ததை கூறினேன் என்று நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். 

இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் நாகஜோதி தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் அளித்த வாக்கு மூலத்தின் படி இயக்குனர் ஷங்கரிடம் விபத்து நிகழ்ந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் விபத்து நிகழ்ந்தபோது யாரெல்லாம் அங்கு இருந்தார்கள் இந்த விபத்துக்கான காரணம் யார் ?  யாருடைய ஜாக்கிரதை காரணமாக விபத்து நடைபெற்றது விசாரித்தனர். இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் இன்று காலை ஆஜராகினார். கமலிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 : 30 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கமல் ஹாசன் கூறியதாவது,  உயிர் தப்பியோரில் நானும் ஒருவன். இந்த 3 பேருக்கு செய்யும் கடமையாக கருதி ஆஜராகி விளக்கம் அளித்தேன். விபத்துக்கள் நேராமல் இருப்பதற்கு நாங்கள் எடுக்கும் முயற்சிகளில் முதல்கட்ட முயற்சியாகவே இந்த இந்த கலந்துரையாடலை கருதுகிறேன். நேற்று சினிமா துறையை சார்ந்தவர்கள் என்னுடைய அலுவலத்தில் வந்து இது குறித்து பேசினோம் என்றார்.

மேலும் தொடர்ச்சியாக இங்கேயும் காவல்துறைக்கு அங்கு நடந்த சம்பவங்களையும், இனி சினிமா துறையில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கு போலீசாரிடம் ஆலோசித்ததாகவும், பரிந்துரைக்கும் ஏதாவது கருத்துக்கள் இருப்பின் அதையும் நாங்கள் தெரிந்து கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

Categories

Tech |