Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 பேரை கொலை செய்ய முயற்சி… பயங்கரமான ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 7 பேர் கைது…. திராவகம் நிரம்பிய பாட்டில் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!!!

3 பேரை கொலை செய்ய பயங்கரமான ஆயுதங்களுடன் மறைந்திருந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை, கொரட்டூர் அடுத்துள்ள மாதனாங்குப்பம் பஜனை கோவில் தெருவில் இருக்கின்ற ஒரு வீட்டில் பயங்கரமான ஆயுதங்களுடன் சிலர் மறைந்து இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவல் அறிந்த உடனே இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் பச்சமுத்து தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குறிப்பிட்ட வீட்டுக்குள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் ஒருவர் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். வீட்டில் இருந்த 7 பேரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். அவர்களிடமிருந்து 8 அரிவாள்கள், கத்திகள், திராவகம் நிரம்பிய பாட்டில்கள், 2 கிலோ கஞ்சா மற்றும் அவர்கள் வைத்திருந்த 5 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஆவடியில் வசித்த 26 வயதுடைய பிரகாஷ், 29 வயதுடைய பாலகிருஷ்ணன், கல்பாக்கத்தில் பாளையத்தில் வசித்த மற்றொரு 26 வயதுடைய பிரகாஷ், புத்தகரம் பகுதியில் வசித்த 20 வயது ஜெயக்குமார், வில்லிவாக்கம் பகுதியில் வசித்த 19 வரை ராபர்ட், பெரம்பூரில் வசித்த 22 வயதுடைய ஈசாக், திருமுல்லைவாயலை வசித்த 19 வயதுடைய கிருஷ்ணகுமார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 7 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் கைதான பிரகாஷ் தற்சமயம் ஆவடியில் வசித்து வருகின்றார். இதற்குமுன் பெரம்பூரில் வசித்து வந்துள்ளார். அவர்மீது கொலை முயற்சி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக அவருக்கு அப்பகுதியில் எதிரிகளால் ஆபத்து ஏற்படும் என்று ஆவடிக்கு குடியேறியதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரகாஷ் தனது நண்பர் பாலகிருஷ்ணன் உடன் நேற்று முன்தினம் மாலை பெரம்பூருக்கு சென்றுள்ளார். இதை அறிந்த பெரம்பூரில் வசித்த சீனா, கண்ணன், தினேஷ் உட்பட 10 பேர் சேர்ந்த கும்பல் பிரகாஷ், பாலகிருஷ்ணன் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு பிரகாஷ், பாலகிருஷ்ணன் இருவரும் தங்களுடைய கூட்டாளிகளான மற்றவர்களை பெரம்பூருக்கு வரவழைத்து தங்களைத் தாக்கிய சீனா, கண்ணன், தினேஷ் ஆகிய மூன்று பேரையும் கொலை செய்ய திட்டம் திட்டி பயங்கரமான ஆயுதங்களுடன் வீட்டில் மறைந்து இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கைதான 7 பேரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். சரியான சமயத்தில் காவல்துறையினர் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த 7 பேரை கைது செய்து விட்டதால் மூன்று கொலைகள் தப்பித்துவிட்டது. இதற்காக காவல்துறையினரை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Categories

Tech |