Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

3 பேரை திருமணம் செய்த முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கிராமத்தில் ராஜேந்திரன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பானிபூரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு சகுந்தலா, செல்வி, சித்ரா என்ற மூன்று மனைவிகள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேந்திரன் சம்பாதிக்கும் பணத்தில் மது குடித்துள்ளார். இதனால் மனைவிகளும், குழந்தைகளும் அவரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை பக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |