மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் வைத்து மாணவர்களின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அர்ஜுன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் தேர்வு கட்டணம் 3 மடங்கு உயர்த்தியதை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை செயலாளர் பிரகாஷ், நிர்வாகிகள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.