அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இபிஎஸ்-க்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மூடி மறைக்கப்பட்ட பல அதிர்ச்சியான தகவல்கள் தெரிய வந்துள்ளதால் விசாரணையை முடிக்க காலகிட நிர்ணயிக்க கூடாது என்று சென்னை ஹைகோர்ட் காவல் துறை தெரிவித்துள்ளது.பொதுக்குழு தீர்ப்பு வெளியான அடுத்த மூன்று மணி நேரத்தில் இந்த அதிர்ச்சி செய்தி வெளியானதால் மகிழ்ச்சியிலிருந்து இபிஎஸ் தரப்பு கலக்கம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.