Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 மணி நேரம் தொடர் சிகிச்சை…. நோயால் அவதிப்பட்ட யானை…. வனத்துறையினரின் கண்காணிப்பு…!!

வனப்பகுதியில் நோயால் அவதிப்பட்ட யானைக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி வனச்சரகம் பாலப்படுகை அருகே வனப்பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் ஒரு யானை படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா அறிவுரையின்படி தாளவாடி வனசரக அலுவலர் சதீஷ், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கால்நடை மருத்துவர் சதாசிவம், வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். அதன்பின் கால்நடை மருத்துவர் சதாசிவம் யானையை  பரிசோதித்துப் பார்த்து, அது பெண் யானை என்றும் அந்த யானைக்கு 4 வயது இருக்கும் என்று கூறினார்.

அதன்பின் குடற்புழு நோயால் அவதிப்பட்ட அந்த யானை கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார். இதையடுத்து சுமார் 3 மணி நேரம் சிகிச்சை அளித்தபின் யானை சற்று உடல் நலம் சரியாகி மெல்ல எழுந்திருக்க ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் யானையை கயிறு கட்டி இழுத்து எழுந்து நடக்க வைத்தனர். யானை மெல்ல மெல்ல எழுந்து நடந்து வனப்பகுதிக்கு சென்று விட்டது. மேலும் வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து அந்த யானையை கண்காணித்து வருகிறார்கள்.

Categories

Tech |