அமெரிக்காவில் தற்கொலை செய்த நபரின் ஆவி வீட்டில் நடமாடுவதாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா பகுதியில் வசிப்பவர் Roberto Morales. இவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தன் சகோதரர் ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் தற்போது அந்த வீட்டில் ஆவியாக சுற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது அந்த வீடியோவில் Roberto தன் ட்ரக்கிலிருந்து ஒரு மூட்டையை எடுத்துச்செல்கிறார்.
அப்போது அங்கிருக்கும் சில்வர் நிற காரின் அருகே கருப்பு உருவம் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து Robertoவின் தங்கை ஒருவரும் வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அதில் காரின் கண்ணாடியில் ஒரு உருவம் தெரிந்துள்ளது. மேலும் முகம் பார்க்க வைத்திருக்கும் கண்ணாடி ஒன்றிலும் தற்கொலை செய்த அவரின் சகோதரர் முகம் போன்று தெரிகிறது. தற்போது அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் வீடியோவை கண்ட சிலர் விரைவாக அந்த வீட்டை காலி செய்யுமாறு Robertoவிடம் கூறி வருகின்றனர்.