Categories
அரசியல் மாநில செய்திகள்

3 மாடி கட்டிடம்…. ரூ.24 கோடி செலவில்…. மோடி அரசால் மாஸாகும் தமிழ்… கெத்தாக போகும் திருக்குறள் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு புதிதாக 11 மருத்துவ கல்லூரியை துவக்கவிழா செய்திருக்கிறார். பாரதப் பிரதமர் அவர்களும், தமிழகத்தினுடைய மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் அந்த நிகழ்ச்சியில் இணைந்து தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 11 மருத்துவ கல்லூரி.

இதன் மூலமாக 1450 மெடிக்கல் சீட் இந்த ஆண்டுமுதலாகவே நம்முடைய மக்களுக்கு நேரடியாகவே வருகிறது. இந்த மகிழ்ச்சிகரமான சமயத்திலேயே நம்முடைய செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம். அந்த நிறுவனத்துடைய புதிய 3 மாடி கட்டிடம், 24 கோடி செலவில் அதையும்கூட பாரத பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இந்த செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மூலமாக நம்முடைய திருக்குறள் இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மொழிகளிலும் கூட மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, அந்தந்த மாநிலத்தில் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அதேபோல திருக்குறளை 100 அயல் மொழியில்  மொழிமாற்றம் செய்து உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது நமது நோக்கமாக இருக்கின்றது.

அந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் உடைய நூலகத்தில் கிட்டத்தட்ட 45 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றது. 4,800 அரிய தமிழ் புத்தகங்கள் இருக்கின்றது. நம்முடைய ஓலைச்சுவடிகள், சங்கம் காலத்திலிருந்து நம்முடைய அற்புதமான தமிழ் படைப்புகள் அனைத்தும் கூட தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் இருக்கின்றது.

இது குறிப்பாக 600 ad வரை சங்கத்தமிழ் பற்றிய ஆய்வு செய்வதற்காக தொடங்கப்பட்ட நிறுவனம். அதையும் கூட பிரதமர் தொடங்கி வைத்திருக்கின்றார்.இதன் மூலமாக நிச்சயமாக நமக்கு தமிழகத்திலேயே கிராமப்புற மாணவர்கள் முப்பத்தி ஏழு மாவட்டத்திலும் கூட நமக்கு மருத்துவக் கல்லூரிகளில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்திலும் கூட மருத்துவ கல்லூரி, நீலகிரியில் மருத்துவ கல்லூரி வந்திருக்கின்றது.

Categories

Tech |