Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

3 மாணவர்களுக்கு கொரோனா உறுதி…. 3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அந்த பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி முழுவதுமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |