Categories
சென்னை மாவட்ட செய்திகள்

3 மாதங்களாக பூட்டி கிடந்த கடை…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடையில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள வெள்ளானூர் 2-வது தெருவில் பிரசாந்த்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான துரித உணவு கடை வெள்ளனூர் சந்திப்பில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடையில் மாஸ்டர் இல்லாததால் பிரஷாந்த் கடந்த 3 மாதங்களாக கடையை பூட்டி வைத்துள்ளார். நேற்று மாலை இந்த கடையின் மேற்கூரையில் இருந்து திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |