Categories
அரசியல் மாநில செய்திகள்

3 மாதங்களில் 33 அரசு அதிகாரிகள் கைது – என்ன காரணம்?

தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறப்படுவதாக அதிகளவில் புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த்முரளி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர், அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆர்.டி.ஒ., பத்திரப்பதிவு, வருவாய்த்துறை அலுவலகங்கள் என 127 இடங்களில் சோதனை நடைபெற்றது.

லஞ்சம் பெற்ற 33 அரசு அதிகாரிகளை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவர்களிடம் இருந்து கணக்கில் வராத சுமார் 7 கோடி ரூபாய் ரொக்கம், 7 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி மற்றும் வைர கற்களை பறிமுதல் செய்தனர். குறிப்பாக சுற்றுச்சூழல்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்களில் இருந்து ஐந்தரை கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |