Categories
தேசிய செய்திகள்

3 மாதங்களுக்கு கோதுமை, அரிசி இலவசம்…. அரசு அதிரடி….!!!!!

இந்தியாவில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகம். அதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சில மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமல் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப் படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஏராளம். அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை இழந்த தினக்கூலி தொழிலாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் சாலையோர கடை வைத்திருப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் திட்டமிட்டுள்ளது m

Categories

Tech |