தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மூன்று மாதங்களுக்குப் பின் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கொரோனா முழுமுடக்கம் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சுற்றுலா பயணிகள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றி தனுஷ்கோடியை சுற்றிப் பார்க்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.