Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“3 மாதத்தில் தற்கொலை செய்து கொள்வேன்” உணவு கிடைக்காமல் சிரமப்படும் முதியவர்…. வருவாய் அதிகாரியின் நடவடிக்கை…!!!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் தேவண்னகவுண்டனூர் பகுதியில் வசிக்கும் செல்லப்பன்(70) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, விபத்தில் எனது இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற்று இரும்பு வளைவுடன் கூடிய ஊன்றுகோல் உதவியுடன் நடமாடி வருகிறேன். உறவினர்கள் என்னை கைவிட்ட நிலையில், நடக்க முடியாததால் எனக்கு 100 நாள் வேலையும் வழங்கப்படவில்லை. மேலும் மாதம் தோறும் வந்த ரூபாய் ஆயிரம் முதியோர் உதவித் தொகையும் நிறுத்தப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறேன்.

சில நேரங்களில் உணவு கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறேன். இந்த நிலை நீடித்தால் மூன்று மாதத்திற்குள் தற்கொலை செய்து கொள்வேன் எனவும், எனக்கு உதவ முன் வர வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் மூன்று சக்கர சைக்கிள், காது கேட்கும் கருவி, உதவித்தொகை ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கோதைசெல்வி முதியவரிடம் விசாரணை நடத்தி அவரை தனியார் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார்.

Categories

Tech |