நண்பரிடம் 30 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மல்லிகாபுரம் பகுதியில்சதிஷ் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜோதி நகரில் உள்ள தனது நண்பரான சுந்தர் என்பவரிடம் தொழில் செய்வதற்காக 30 லட்சம் ரூபாயை கடனாக வாங்கி உள்ளார். இந்த பணத்தை 3 மாதத்தில் திருப்பி தருவதாக சதீஷ்குமார் கூறியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காததால் சுந்தர் அதனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சதீஷ்குமார் தனது குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தர் திருவெற்றியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வரதபுரம் பகுதியில் தலைமறைவாக இருந்த சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.