Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“3 மாதமாக தவணை தொகை கட்டவில்லை” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மணமை பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்பாக்கத்தில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சதீஷ்குமார் ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். கடந்த 3 மாதமாக தவணை தொகையை கட்டாததால் பைனான்ஸ் நிறுவனத்தினர் சதீஷ்குமாரை தொந்தரவு செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் பாழடைந்த கட்டிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சதீஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |