Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

3 மாதம்… 7,243 ஏக்கர் பாசன வசதி மேற்கொள்ள தண்ணீர் திறப்பு… முதல்வர் உத்தரவால் விவசாயிகள் மகிழ்ச்சி..!!

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணையில் இருந்து இன்று காலை விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. இதன்  காரணமாக அடவிநயினார் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியது. இதை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவு படி இன்று முதல் நவம்பர் மாதம் 25ஆம் தேதி வரை அடவிநயினார்  அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 7,243 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |