தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு இடங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சென்னை, ஈரோடு, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த மூன்று வாரங்களாக பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஐசிஎம்ஆரின் கீழ் செயல்படும் தேசிய தொற்றுநோய் நிலைய துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தொற்றுப்பரவல் இடங்களை கண்டறிந்து பரிசோதனைகள், தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் .மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.