தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இருந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் சென்னை,செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாளை முழு ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதால் இன்று கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குடன் சேர்த்து நாளை (சனி) முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.