Categories
மாநில செய்திகள் வானிலை

3 மாவட்டத்தில் இடி-மின்னலுடன்…. 12ஆம் தேதி பருவமழை…. 15ஆம் தேதி குளிர்…. மக்களுக்கு அலெர்ட் ..!!

வட கிழக்கு பருவ மழை வரும் 12ஆம் தேதி வரை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திரு.புவியரசன், அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும்,  தென் கடலோரப் பகுதிகளில் மிதமான மழைக்கும் , நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறினர். தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடகிழக்கு பருவமழை வரும் 12ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவித்த அவர், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் மழை அளவு அதிகமாக உள்ளதாக கூறினார். சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வரும் 15ஆம் தேதிக்கு பிறகு குளிர் குறைந்து  வெப்பம் அதிகரிக்கும் என்றும் புவியரசன் தெரிவித்தார்.

Categories

Tech |