Categories
மாநில செய்திகள்

“3 முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்த தேர்வு கிடையாது” – செங்கோட்டையன்

புதிய தேசியக் கல்வி கொள்கையை குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

நாடு முழுவதும் புதிய தேசியக் கல்வி கொள்கையை எதிர்த்தும், ஆதரவு கூறியும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது, அது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது, சட்டப்பேரவையில் புதிய கல்விக் கொள்கை பற்றி சிறப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார்.

அதற்கு பதில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் மும்மொழி கொள்கையை  ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். மேலும் சமூக நீதிக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் எதையும் தமிழகத்தில் அனுமதிக்கவும் மாட்டோம் என்று அவர் தெரிவித்தார். தேசியகல்வி கொள்கை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் நிபுணர்களிடம் இருந்து கருத்துக்கள் பெறப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பபட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அது மட்டுமின்றி, தமிழகத்தில் 3,5, 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒரு போதும் பொதுத் தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |