இந்திய அணியின் ஆலோசகராக நியமனம் தோனி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்..
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17ஆம் தேதி (இன்று) தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இந்திய அணி 18ஆம் தேதி (நாளை) நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியையும், 20ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியையும் எதிர்கொள்கிறது.. அதனை தொடர்ந்து 24ஆம் தேதி முக்கிய போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கிறது..
இந்த டி20 உலக கோப்பை தொடரில் முன்னாள் கேப்டனான தல தோனி இந்திய அணியின் ஆலோசகராக நியமித்துள்ளது பிசிசிஐ.. இவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஏனென்றால் 2007ஆம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை என 3 கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தவர் தோனி.. எனவே இவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை..
இந்த நிலையில் தோனி ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் கூறியதாவது, மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் எம்.எஸ் தோனி.. இந்திய அணியின் ஆலோசகராக நியமனம் தோனி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.. .. அவர் ஆலோசகராக தேர்வு செய்யப்பட்டது அணிக்கு கூடுதல் நம்பிக்கை தரும் என்று கூறியுள்ளார்..
ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக கேப்டனாக இருந்து இதுவரை 4 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் தோனி என்பதும் குறிப்பிடத்தக்கது..